சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாண்டோ, சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ரமேஷ் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா உட்பட 10 வீரர்கள் ஏற்கனவே தென்னாபிரிக்கா சென்று அங்கு நீல் மெக்கென்ஸியின் கீழ் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எஞ்சிய 7 வீரர்கள் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கெபெர்ஹா, சென். ஜோர்ஜஸ் பார்க் அரங்கில் டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.
இலங்கை டெஸ்ட் குழாம்
தனஞ்சய டி சில்வா (தலைவர்)
பெத்தும் நிஸ்ஸன்க
திமுத் கருணாரட்ன
தினேஷ் சந்திமால்
ஏஞ்சலோ மெத்யூஸ்
குசல் மெண்டிஸ்
கமிந்து மெண்டிஸ்
ஓஷத பெர்னாண்டோ
சதீர சமரவிக்ரம
ப்ரபாத் ஜயசூரிய
நிஷான் பீரிஸ்
லசித் எம்புல்தெனிய
மிலன் ரத்நாயக்க
அசித்த பெர்னாண்டோ
விஷ்வா பெர்னாண்டோ
லஹிரு குமார
கசுன் ராஜித்த
